பொது டிசம்பர் 01,2020 | 19:15 IST
மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இன்று சிவசேனா கட்சியில் சேர்ந்தார், பிரபல நடிகை ஊர்மிளா மடோன்கர். மும்பையை பிஓகேவுடன் ஒப்பிட்டு, உத்தவ் தாக்கரேயை நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்தபோது, கங்கனாவை எதிர்த்து அறிக்கை விட்டவர், ஊர்மிளா. இம்மாத தொடக்கத்தில் ஊர்மிளா உட்பட பல துறைகளைச் சேர்ந்த 12 பிரபலங்களை எம்எல்சியாக நியமிக்க கவர்னர் கோஷ்யாரிக்கு உத்தவ் தாக்கரே பரிந்துரைத்தார். அதற்கு இன்னமும் கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஊர்மிளா சிவசேனாவில் சேர்ந்துள்ளார் சிவசேனாவின் மகளிரணி மிகவும் வலிமையானது; அதில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி; நான் எம்எல்சி ஆனால் பெண்கள், குழந்தைகளுக்காக உழைப்பேன் என்றார்.
வாசகர் கருத்து