செய்திச்சுருக்கம் டிசம்பர் 02,2020 | 20:00 IST
நீதிபதிகளின் குடும்பத்தினர் மற்றும் நீதிமன்ற ஊழியர்களை அவதூறாக பேசிய முன்னாள் ஐகோர்ட் நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் பெண் வழக்கறிஞர்கள் கடந்த மாதம் சுப்ரீம் கோர்டுக்கு கடிதம் எழுதினர் . சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது . கர்ணன் வழக்கு குறித்து 7 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர் . இந்த நிலையில் கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
வாசகர் கருத்து