பொது டிசம்பர் 03,2020 | 13:21 IST
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு | ரஜினி நடிகர் ரஜினிகாந்த திங்கட்கிழமை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என கூறி இருந்தார். இந்நிலையில் ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என ரஜினி அறித்துள்ளார். இது தொடர்பான விவரங்கள் டிசம்பர் 31 தேதி அறிவிக்கப்பட உள்ளது. வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும் என குறிப்பிட்டுள்ளார். மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என ஹேஷ்டேக்வுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு டிசம்பர் 31ல் அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்த ரஜினி 3 ஆண்டுகளுக்கு பின் கட்சி தொடர்பான தகவல்களை வெளியிட உள்ளார்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: