பொது டிசம்பர் 03,2020 | 14:11 IST
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டில்லியில் ஒரு வாரத்துக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள்தான் பெருமளவில் டில்லியில் குவிந்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம், ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் மாறி மாறி அந்த கட்சிகளே பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றன. மூன்று வேளாண் சட்டங்களை டில்லி ஆம் ஆத்மி அரசு அரசிதழில் வெளியிட்டதாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் நேற்று முன்தினம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
வாசகர் கருத்து