செய்திச்சுருக்கம் டிசம்பர் 04,2020 | 08:06 IST
புரெவி புயல், இலங்கையின் திரிகோணமலை அருகே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அதன்பிறகு வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. புரெவி புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. மதுரைக்கு நண்பகல் 12 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஏர்போர்ட் இன்று செயல்படாது
வாசகர் கருத்து