பொது டிசம்பர் 04,2020 | 15:40 IST
சென்னை ஐகோர்ட்டுக்கு நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், வீராசாமி சிவஞானம், ஜி.இளங்கோவன், ஆனந்தி சுப்ரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், எஸ்.சத்திகுமார், கே.முரளிசங்கர் குப்புராஜு, ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் நேற்று பதவி ஏற்றுக்கொண்ட புதிய நீதிபதிகள். ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 75.
வாசகர் கருத்து