பொது டிசம்பர் 04,2020 | 17:12 IST
பெரம்பலூரில் பல ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. செட்டிகுளத்தை சேர்ந்த விவசாயி துரைராஜ், நடவுபணிக்காக வயலில், பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை பாதுகாத்து வந்தார். அவர் வயலுக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த 400கிலோ சின்ன வெங்காயம் திருடு போனது தெரியவந்தது. இதே போல நாட்டார்மங்கலத்தை சேர்ந்த ரவி என்பவரின் பட்டறையிலும் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ வெங்கயத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த கிராமங்களில் இதுவரை ஆயிரம் கிலோ வரை சின்ன வெங்காயம் திருடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து