பொது டிசம்பர் 04,2020 | 16:50 IST
கொரோனா மற்றும் தடுப்பு மருந்து நிலவரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சில வாரங்களில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாராகிவிடும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அவர்கள் பச்சைக்கொடி காட்டியவுடன் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். 8 தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன என்றார். மற்ற நாடுகளை விட, குறைந்த விலையில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகிக்க நம்மால் முடியும். அதற்கான திறன், நிபுணத்துவம், அனுபவம் இந்தியாவிடம் உள்ளது. அதை முழுமையாக பயன்படுத்துவோம். சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், நோயாளிகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த விலையிலான பாதுகாப்பான கொரோனா தடுப்பு மருந்தை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. அதனால், இந்தியாவை அவர்கள் உற்று கவனித்து வருகிறார்கள். தடுப்பு மருந்து விலை நிர்ணயம் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேசிவருகிறது. மருந்து விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்நிலையில், 160 கோடி தடுப்பு மருந்துகளை வாங்க இந்தியா ஆர்டர் செய்துள்ளது. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியிடம் 50 கோடி, அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்திடம் 100 கோடி, ரஷ்யாவின் காமலியா Gamaleya நிறுவனத்திடம் 10 கோடி டோஸ்கள் வாங்கப்பட உள்ளன. இந்தியாவுக்கு அடுத்து, ஐரோப்பிய யூனியன் 158 கோடியும், அமெரிக்கா 100 கோடியும் தடுப்பு மருந்து வாங்க 5 நிறுவனங்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளன
வாசகர் கருத்து