பொது டிசம்பர் 04,2020 | 17:55 IST
புரெவி புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் 2 தினங்களாக மழை கொட்டுகிறது. கடலூர் சிதம்பரத்தில் அதிகபட்சமாக 34 செ.மீ., மழை பதிவானது. இதனால், சிதம்பரம் நடராஜர் கோயில் முழுவதும் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியது. அதிலேயே பக்தர்கள் கோயிலை வலம் வந்தனர். சிவகங்கை குளமும் நிரம்பி வழிகிறது. கோயிலுக்குள் வெள்ளம் வந்துவிட்டால், வடிந்து செல்ல அக்காலத்திலேயே ஏற்பாடுகள் செய்து வைத்துள்ளனர். மழைநீர் செல்லும் பாதைகள் தூர்வாரி பராமரிக்காததால், தண்ணீர் கோயிலுக்குள் தேங்கியுள்ளது. நீரை வெளியேற்றும் பணிகள் நடக்கிறது.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: