Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 05-12-2020 | Sports News Roundup | Dinamalar

விளையாட்டு டிசம்பர் 05,2020 | 06:55 IST

Share

ஐ.எஸ்.எல்., கால்பந்து: கோல்கட்டா 'ஹாட்ரிக்' வெற்றி கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 7வது சீசன் நடக்கிறது. படோர்டாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா மோகன் பகான், ஒடிசா அணிகள் மோதின. கடைசி நிமிடத்தில் ராய் கிருஷ்ணா ஒரு கோலடித்து கைகொடுக்க 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணி 1-0 என்ற கோல் கணக்கில் 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகளை வீழ்த்தியது. ----- வில்லியம்சன் இரட்டை சதம் நியூசிலாந்து, விண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 243 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய கேன் வில்லியம்சன் 251 ரன்கள் விளாசினார். முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 519 ரன்கள் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்திருந்தது. ----- கிறிஸ்டியானோ ரொனால்டோ 750 இத்தாலியின் டுரின் நகரில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான ‛ஜி' பிரிவு லீக் போட்டியில் யுவன்டஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் டைனமோ கைவ் அணியை வீழ்த்தியது. யுவன்டஸ் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு கோலடித்தார். இது, ஒட்டுமொத்த கால்பந்து அரங்கில் இவரது 750வது கோல்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X