Advertisement

துரோகி என்கிறார் அண்ணன் மகள்

பொது டிசம்பர் 06,2020 | 14:52 IST

Share

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதும் டெனால்ட் டிரம்ப் ஜெயிலுக்குதான் போவார் என்று அவரது அண்ணன் மகள் மேரி டிரம்ப் கூறியுள்ளார். டெனால்ட் டிரம்ப் ஒரு குற்றவாளி, கொடூரமானவர், துரோகி என்று கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை தவறாக கையாண்டதால் லட்சக்கணக்கானவர்கள் இறந்தனர். எப்போதும் தமக்குதான் வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் டிரம்ப். அதனால் பிறர் பாதிக்கப்பட்டாலும், அவருக்கு கவலையில்லை. தேர்தலில் தோல்வி அடைந்த பின்னரும், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுப்பதில் இருந்தே அவரது குணத்தை புரிந்து கொள்ள முடியும். டிரம்ப் செய்த குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டியவர். மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று விட்டுவிடக்கூடாது. இதுவரை முன்னாள் அதிபர்கள் கைது செய்யப்பட்டதில்லை. ஆனால் சக்திவாய்ந்தவர்களை தண்டனையில் இருந்து பாதுகாப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்று மேரி டிரம்ப் கூறியுள்ளார். மனோதத்துவ நிபுணரான மேரி டிரம்ப், அதிபரின் மோசமான மறுபக்கம் பற்றி, “Too Much and Never Enough" என்ற புத்தத்தை எழுதி சமீபத்தில் வெளியிட்டார். அது, விற்பனையில் சக்கைபோடு போட்டது. இதன் தொடர்ச்சியாக “The Reckoning” என்ற புத்தகத்தை வெளியிட உள்ளார். அதன் விளம்பரத்திற்காக கூட இந்த குற்றச்சாட்டுகளை மேரி கூறியிருக்கலாம் என்று அதிபரின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X