Advertisement

அனுமதி கேட்கிறது பைசர் நிறுவனம்

பொது டிசம்பர் 06,2020 | 15:12 IST

Share

அமெரிக்காவின் பைசர் pfizer நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் BioNTech நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. 95 சதவீதம் செயல்திறன் மிக்க இந்த தடுப்பூசியை தங்கள் நாட்டில் பயன்படுத்த பிரிட்டன் மற்றும் பக்ரைன் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளன. இந்த மருந்தை, இந்தியாவிலும் அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பைசர் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 2019 மருந்து பரிசோதனை சட்டத்தின் கீழ், இந்திய மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்வதை தவிர்த்துவிட்டு, மருந்தை இறக்குமதி செய்து அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பம் தொடர்பாக, மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் எனத்தெரிகிறது. தடுப்பூசியை, மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பதப்படுத்தி வைத்திருக்க வேண்டும். இந்தியா போன்று கிராமப்புறங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில், அதற்கான குளிர்பதன வசதிகளை ஏற்படுத்தி பராமரிப்பது பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X