Advertisement

ரூ.3,758 கோடி நிவாரணம் கேட்டது தமிழக அரசு

பொது டிசம்பர் 06,2020 | 16:27 IST

Share

புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், இரு குழுக்களாக பிரிந்து சேதங்களை பார்வையிட்டு வருகின்றனர். தென்சென்னையில், வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், ரேடியல் சாலை மற்றும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்தனர். மாநகராட்சி அதிகாரிகள், புகைப்படங்கள் மூலம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கினர். வடசென்னையில், காசிமேடு கடற்ககரையில் புயலால் 40 க்கும் மேற்பட்ட படகுகள் நீரில் மூழ்கின. பல படகுகள் சேதமடைந்தன. அவற்றை பார்வையிட்டு, சேதங்கள் பற்றி மீனவர்களிடம் கேட்டறிந்தனர். தாம்பரம், முடுச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழு பார்வையிட்டது. மழைநீர் தேங்காமல் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் எனக்கோரி அப்பகுதிமக்கள் மனு அளித்தனர். செங்கல்பட்டில், பெரும்பாக்கம், பூத்தண்டலம், திருக்கழுக்குன்றம், இரும்புலிச்சேரி, திருக்கழுக்குன்றம் மற்றும் வேடால், சித்தாம்பூரில் மத்திய குழு ஆய்வு செய்தது. கலெக்டர் ஜான்லூயிஸ் வரைபடம், போட்டோ வீடியோக்கள் மூலம் புயல் சேதங்களை விளக்கினர். திருவள்ளூரில், எண்ணூர் முகத்துவாரம், அத்திப்பட்டு, புதுநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணிகளை மத்திய குழு பார்வையிட்டது. நெய்தல்வாயலில் புயலால் சாய்ந்த வாழை மரங்கள், வஞ்சிவாக்கத்தில் வெள்ளத்தால் உடைந்த ஆரணியாற்றின் கரை பகுதியை ஆய்வு செய்தனர். முன்னதாக, மத்திய குழுவினர், தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினர். அப்போது, புயல் பாதிப்புகளை சீரமைக்க 3,758 கோடி ரூபாய் தேவை என்று மத்திய குழுவிடம் தமிழக அரசு கேட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X