Advertisement

பயம் குறைந்துவிட்டது என்கிறார் கோவா டாக்டர்

பொது டிசம்பர் 11,2020 | 15:05 IST

Share

திருமண நிகழ்ச்சிகளில் தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக கோவா மெடிக்கல் கல்லூரியின் டீன் ஷிவானந்த் தெரிவித்தார் . கோவாவில் சமீபத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒருவருக்கு கொரோனா இருந்ததால் , அவர் மூலம் நூறு பேருக்கு பரவியுள்ளதை சுட்டிக்காட்டினார் . வைரஸ் பரவல் குறித்து ஆரம்பத்தில் இருந்த பயம் இப்போது பலருக்கு இல்லை . கொரோனா வைரஸ் பாதிப்பை சளி , ஜலதோஷம் போல் கருதி அலட்சியமாக இருக்கின்றனர் . நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் மாஸ்க்கை கழற்றி விடுகின்றனர் . இடைவெளியும் கடைபிடிப்பதில்லை . பலர் சானிடைசர் பயன்படுத்துவது இல்லை . கொரோனா இன்னும் முழுமையாக ஒழியவில்லை , அதனால் சீரியஸாக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் . கோவாவில் இதுவரை 49 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 703 பேர் பலியாகினர் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X