அரசியல் டிசம்பர் 18,2020 | 20:10 IST
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மாநாட்டு நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசினார். அனைத்து அரசியல் கட்சிகளையும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து விவசாயிகளை தவறாக வழிநடத்தாதீர்கள். கடந்த காலத்தில் எதிர்கட்சிகள் அளித்த தேர்தல் வாக்குறுதிகள்தான், வேளாண் சீர்திருத்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. அவர்களது பிரச்னை வேளாண் சட்டம் அல்ல. வாக்குறுதிகளை தங்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், மோடி நிறைவேற்றிவிட்டாரே. அவருக்கு எப்படி பேரும் புகழும் கிடைக்கலாம் என்பதுதான் அவர்களின் கவலை. வேளாண் சட்டத்தை நிறைவேற்றியதற்கான பெருமையை எதிர்கட்சிகளே எடுத்துக்கொள்ளட்டும். அதை நானே கொடுக்கிறேன். விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும்; வேளாண் துறையில் நவீனத்துவம் கொண்டுவரப்பட வேண்டும் அதுதான் என் விருப்பம். வேளாண் சீர்திருத்தம் ஒரே இரவில் கொண்டுவரப்பட்டதல்ல, 20-30 ஆண்டுகள் மத்திய மாநில அரசுகள் விரிவாக ஆராய்ந்து விவாதித்துள்ளன. விவசாய மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் சீர்திருத்தங்களை வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
வாசகர் கருத்து