அரசியல் டிசம்பர் 24,2020 | 11:52 IST
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படவில்லை. பொறுமையிழந்த அழகிரி, தேர்தல் நெருங்கும் சமயத்தில் தனிக்கட்சி தொடங்கி, திமுகவின் ஓட்டுகளை பிரித்து ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியுடன் அழகிரி கைகோர்க்கக் கூடும் என தகவல்கள் வெளிவரும் நிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு அழகிரி இன்று வந்தார். தாயார் தயாளு அம்மாளை பார்த்து, உடல்நலம் விசாரித்தார். ஜனவரி 3ம்தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அழகிரி சொன்னார்.
வாசகர் கருத்து