Advertisement

ஆந்திராவில் கொடூரம்; ஒருவர் கைது

சம்பவம் டிசம்பர் 24,2020 | 21:52 IST

Share

ஆந்திரா அனந்தபூரில் உள்ள அசோக் நகரை சேர்ந்த சினேகலதா தர்மவரத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கிறார். நேற்று பணி முடிந்து, வீட்டிற்கு சினேகலதா புறப்பட்டார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், தர்மவரம் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். கார்த்தி, ராஜேஷ் ஆகியோர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக புகாரில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தர்மபுரம் சாலையில் முட்புதர் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், அது சினேகலதா என்பதும் மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து கொலை செய்திருப்பதும் தெரிந்தது. ராஜேஷை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X