Advertisement

முதல்வருக்கு ஸ்டாலின் சவால்

அரசியல் டிசம்பர் 25,2020 | 09:00 IST

Share

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள திமுக, 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக கிராமசபை நடத்துவதை அனுமதிக்க கூடாது என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களில் மக்கள் கூடுவதை பார்த்து முதல்வர் பழனிசாமி அதிர்ச்சியடைந்து இருப்பதால் இப்படியெரு உத்தரவை போட்டுள்ளார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு தைரியம் இருந்தால் போட்டி கூட்டம் நடத்தட்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார். 'கிராம சபை' என்ற பெயரில்தானே கூட்டம் நடத்த கூடாது? இனி, மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு தொடரும். முதல்வர் மட்டுமல்ல, அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X