அரசியல் டிசம்பர் 25,2020 | 09:30 IST
காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தினர். அது தொடர்பாக, விவசாயிகள் கையெழுத்திட்ட தீர்மானத்தையும் ஜனாதிபதியிடம் கொடுத்தனர். இது பற்றி பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ராகுல் சொல்வதை காங்கிரஸ் கட்சியினர் கூட பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று கிண்டல் செய்தார். வேளாண் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து தீர்மானத்தை ராகுல் கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரசில் இருந்து யாரும், தங்களிடம் கையெழுத்து பெறவில்லை என்று விவசாயிகள் தம்மிடம் தெரிவிக்கிறார்கள் என்று அமைச்சர் சொன்னார். விவசாயிகளுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டுமென்று ராகுல் நினைத்திருந்தால், அவர்களது ஆட்சி காலத்திலேயே செய்திருக்க முடியும். அதை செய்யவில்லை ஏனென்றால், காங்கிரஸ் எப்போதுமே விவசாயிகளுக்கு எதிராக கட்சி என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். வேளாண் சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் 4வது வாரமாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. சட்டத்தில் திருத்தங்களை ஏற்க மறுக்கும்
வாசகர் கருத்து