Advertisement

96வது பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழாரம்

அரசியல் டிசம்பர் 25,2020 | 11:20 IST

Share

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96வது பிறந்தநாளை நல்லாட்சி தினமாக பாரதிய ஜனதா கட்சி கொண்டாடுகிறது . டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மற்றும் மத்திய அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தவர், வலுவான வளமான இந்தியாவை கட்டமைக்க அவர் எடுத்த முயற்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரபிரதேசம் லக்னெளவில் உள்ள லலித் கலா அகாடமியில் 30க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 97 அடி நீளம் அளவு போர்ட்டில் வாஜ்பாய் ஓவியங்களை வரைந்தனர் . அவரது வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட சிற்பிகள் அவரது சிலையை செதுக்கியுள்ளனர் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X