Advertisement

மோடி பேச்சுக்கு மம்தா பதிலடி

பொது டிசம்பர் 26,2020 | 09:25 IST

Share

விவசாயிகள் உதவித்தொகை திட்டத்தில், 9 கோடி விவசாயிகளுக்கு இந்த ஆண்டுக்கான தவணை தொகை, 18 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் உள்ள 70 லட்சம் விவசாயிகளை, இந்த திட்டத்தில் பயனடைய விடாமல் முதல்வர் மம்தா தடுக்கிறார். அவரது சித்தாந்தங்கள் மாநிலத்தை சீரழித்து வருகிறது என்று சாடினார். இதற்கு பதிளித்த மம்தா பானர்ஜி, அரசியல் காரணங்களுக்காக பிரதமர் மோடி இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்தார். விவசாயிகள் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணாமல் டிவியில் தோன்றி அக்கறை காட்டி வருகிறார். கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவ விரும்புவதாக கூறும் மோடி, பாதி உண்மையை கூறி மக்களை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார். விவசாயிகளின் நலனுக்காக மேற்கு வங்க அரசு, மத்திய அரசுடன் எப்போதும் ஒத்துழைக்க தயாராக இருக்கிறது. அதற்கான முயற்சிகள் எடுத்தபோதும், அவர்கள்தான் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மேற்கு வங்கத்திற்கு, மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. ஜிஎஸ்டி உட்பட நிலுவையில் உள்ள 85 ஆயிரம் கோடியில், ஒரு பகுதியை கூட அவர்கள் தரவில்லை. முதலில் வழங்கட்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X