பொது டிசம்பர் 26,2020 | 10:00 IST
திருப்பூர், அவிநாசி அருகே, தண்டுக்காரன்பாளையத்தில், ரோட்டோரத்தில் குப்பைகளுக்கு மத்தியில் 8 வயது பெண் குழந்தை வீசப்பட்டு கிடந்தாள். மூச்சு திணறலுடன் மீட்கப்பட்ட குழந்தை, கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தையை வீசி சென்றவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோவை ஆராய்ந்ததில், அந்த குழந்தையுடன் ஒரு பெண் இருந்தது தெரியவந்தது. அவரை தேடி வந்தனர். இந்நிலையில், தண்டுக்காரன் பாளையத்தில், நள்ளிரவில் பெண் ஒருவர் தனியாக சுற்றித்திரிந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, குழந்தையை வீசி சென்ற தாய் சைலஜா என்பது தெரிந்தது. பெங்களூரை சேர்ந்த அவர், தாம் ஒரு டாக்டர் என கூறியுள்ளார். கணவரை பிரிந்து வாழ்கிறார். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சைலஜாவை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் எதற்காக திருப்பூர் வந்தார். குழந்தையை ஏன் குப்பையில் வீசியெறிய வேண்டும் உள்ளிட்ட விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து