பொது டிசம்பர் 26,2020 | 17:00 IST
தமிழகத்தில் 32 மாவட்ட நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான முதல்நிலை தேர்வு மார்ச்சில் நடப்பதாக இருந்தது. கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட தேர்வு, நவம்பர் 1ம்தேதி நடந்தது. 2,500 பேர் தேர்வில் பங்கேற்றனர். சிவில் மற்றும் கிரிமினல் சட்டம் என இரு தாள்களாக முதல் நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அப்ஜக்டிவ் டைப் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 7 ஆண்டுகள் அனுபவம் உள்ள வக்கீல்கள், உதவி அரசு வக்கீல்கள் உள்ளிட்டவர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. 2,500 பேரில் 6 பேர் மட்டும்தான் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதம் 0.24 கால் சதவீதத்துக்கும் குறைவு.
வாசகர் கருத்து