அரசியல் டிசம்பர் 27,2020 | 10:25 IST
பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழகம் அரசு அறிவித்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க டோக்கன் கொடுத்து பணத்தை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியில் அரசு அதிகாரிகள் அதிமுக தொண்டர்கள் உதவியுடன் டோக்கன் விநியோகம் செய்து வருகின்றனர். அப்போது அங்கு வந்த திமுக முன்னாள் கிருஷ்ணாபுரம் எம்.எல்.ஏ காமராஜ் டோக்கன் வழங்க அதிமுகவினரை அழைத்து செல்ல கூடாது என்றும், திமுக நபர்கள் தான் வருவோம் என மிரட்டியுள்ளார்.
வாசகர் கருத்து