Advertisement

கோவை பெண்ணை பாராட்டிய மோடி

பொது டிசம்பர் 27,2020 | 18:50 IST

Share

கோவை, சாய்பாபா காலனியை சேர்ந்த காயத்ரி, சில தினங்களுக்கு முன்பு சாலையோரத்தில் கத்திக்கொண்டிருந்த நாய் குட்டியை கவனித்தார். இரண்டு பின்னங்கால்களும் இல்லாத குறையுடன் இருந்தது. பரிதாபப்பட்டு வீட்டுக்கு தூக்கி வந்தார். நாய் நடப்பதற்கு ஏதுவாக, தந்தை காசியின் உதவியுடன், பிரத்யேக வீல் சேர் ஒன்றை உருவாக்கினார். அதில், பொருத்தப்பட்ட நாய், இயல்பாக நடமாடி வருகிறது. காயத்ரியின் முயற்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய அவர், நாய்க்கு சக்கர நாற்காலி உருவாக்கிய உணர்வு, உத்வேகம் அளிக்கிறது. மனதில் கருணையும், அன்பும் நிறைந்திருந்தால் மட்டுமே, ஒருவால் இப்படி செய்ய முடியும் என்று வாழ்த்தினார். இதேபோல், மாணவர்களின் கற்றலை எளிதாக்க, தமிழ்பாடத்தை அனிமேஷன் வீடியோவாக மாற்றி தந்த, விழுப்புரம் ஆசிரியை ஹேமலதாவுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X