பொது டிசம்பர் 27,2020 | 21:50 IST
வேளாண் சட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, இரட்டை வேடம் போடுவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், அமேதி தொகுதி எம்பியாக ராகுல் இருந்தபோது, லோக்சபாவில் அவர் பேசிய வீடியோ கிளிப்பை பாஜக தேசிய தலைவர் நட்டா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் பேசும் ராகுல், ஒருகிலோ உருளைக்கிழங்கு 2 ரூபாய்க்கு விற்கப்படும்போது, ஒரு பாக்கெட் சிப்ஸ் எப்படி 10 ரூபாய்க்கு விற்கப்படுவதன் மாயம் என்ன என்று உத்திரபிரதேச விவசாயியிடம் கேட்டேன். அதற்கு அவர், தொழிற்சாலைகள் வெகுதொலைவில் இருக்கின்றன. உற்பத்தி பொருளை விவசாயிகளே நேரடியாக தொழிற்சாலைகளுக்கு விற்றால் இடைத்தரகர்கள் இன்றி முழு பணமும் கிடைக்கும் என்றார். உணவு பூங்கா அமைக்க வேண்டும் என்பதற்கான பின்னணியும் இதுதான். அமேதி மற்றும் உத்திரபிரதேசத்தின் 10-12 மாவட்ட விவசாயிகள் இதற்காக போராடி வருகிறார்கள் என்று ராகுல் பேசியிருக்கிறார். இது என்ன மாயம் ராகுல் என்று கேட்டுள்ள நட்டா, முன்பு வாதிட்டதை இப்போது எதிர்ப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். நாடு மற்றும் விவசாயிகளின் நலனுக்காக நீங்கள் ஒன்றும் செய்தது இல்லை. அரசியல் மட்டும்தான் செய்கிறார்கள். உங்களின் போலித்தனம் பலிக்கவில்லை. இரட்டை வேடத்தை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று நட்டா குறிப்பிட்டுள்ளார். vvvv
வாசகர் கருத்து