பொது டிசம்பர் 28,2020 | 12:20 IST
நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என மார்ச்ச்சில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். ஏப்ரல் 7ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்ட எல்லைகளை வரையறுக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை இன்று காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் பங்கேற்றனர். இதையொட்டி, மயிலாடுதுறையில் நடந்த விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட கலெக்டர் லலிதா, எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
வாசகர் கருத்து