பொது டிசம்பர் 28,2020 | 20:20 IST
தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த பரிசு, அதிமுகவின் நிதியில் இருந்து வழங்கப்படுவதை போல காட்டிக்கொள்ள, முதல்வர் முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலை மனதில் வைத்து, தமிழகம் முழுவதும், அதிமுகவினர் மூலம், முதல்வர் டோக்கன் விநியோகம் செய்ய வைக்கிறார். அரசு கஜானாவில் இருந்து போகும் பரிசு திட்ட நிதியை, திமுகவினர் ஏன் கையாள வேண்டும்? என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். முறைகேடுகளை தடுக்க, ரேஷன் கடை ஊழியர்கள் மட்டுமே டோக்கன் விநியோக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வாசகர் கருத்து