Advertisement

திமுக கவுன்சிலர் அடாவடி

சம்பவம் டிசம்பர் 29,2020 | 21:19 IST

Share

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ஹரிபாபு. சிறுவாபுரி செல்லும் சர்வீஸ் சாலை சந்திப்பில் நேற்றிரவு 10 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு, சோழவரம் ஒன்றிய திமுக கவுன்சிலர் சந்திரசேகர், வருவாய்த்துறை உதவியாளர் தேவராஜ் உள்ளிட்ட மூவர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பொது இடத்தில் ஏன் குடிக்கிறீர்கள்? என ஏட்டு ஹரிபாபு சத்தம் போட்டுள்ளார். நான் யார் தெரியுமா? ஒன்றிய கவுன்சிலர்; எனக்கே அட்வைஸ் பண்றியா நீ? என கேட்டபடி ஹரிபாபுவை சந்திரசேகர் அடித்துள்ளார். நண்பர்களும் தாக்கியுள்ளனர். காயமடைந்த ஹரிபாபு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கவுன்சிலர் சந்திரசேகர், அரசு ஊழியர் தேவராஜ் ஆகிய இருவரை கைது கவரைப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல் நடத்தியது தகாத வார்த்தைகளால் திட்டியது என இந்திய தண்டனைச் சட்டத்தின் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பி ஓடிய சந்திரசேகரின் நண்பரை போலீசார் தேடுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X