பொது டிசம்பர் 30,2020 | 18:55 IST
கரூர் மாவட்டம் குஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. விவசாயி. இவரது மகன் பாலாஜி கரூர் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். நேற்று இரவு டிவிடியில் இருந்து ஸ்பீக்கருக்கு ஒயரை கனெக்க்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மருத்துவமனைக்கு தாய் கொண்டு சென்றார். வழியிலேயே உயிர் பிரிந்தது. மகன் இறந்த செய்தியை கேட்டதும் வயலில் வேலையாய் இருந்த செல்லமுத்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறினர். சிறிது நேரத்தில் அவரும் இறந்தார். ஓரிரு மணி நேரங்களில் மகனும் தந்தையும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
வாசகர் கருத்து