Advertisement

டில்லி போராட்டக்களத்தை கலக்கும் விவசாயி

பொது ஜனவரி 03,2021 | 12:05 IST

Share

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது, விவசாயிகள் சாலையோரம் கூடாரங்கள் அமைத்தும், டிராக்டர் மீது தார்பாய் போற்றியும் தங்கி வருகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு, உடைகள் வழங்கி உதவிகள் செய்து வருகின்றனர். சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உணவு வழங்கி வருகிறார். இதற்காக அவர் போராட்டக்களத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். அதற்காக தனது லாரியை சொகுசு வீடு போன்று மாற்றி அமைத்து அதில் தங்கியிருக்கிறார். விவசாய்த்தை எதிரொலிக்கும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளனர். சோபா, மெத்தை, டிவி, டாய்லெட் என சகல வசதியும் செய்யப்பட்டுள்ளது. வேலைகள் அனைத்தியும் விட்டு விவசாயிகளுக்கு உணவு வழங்க இங்கு வந்ததாக தெரிவித்தார். வீட்டின் நினைவு வந்ததால் லாரியை வீடு போன்று மாற்றியதாக தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X