பொது ஜனவரி 03,2021 | 14:50 IST
ஜார்ஜ் என்ற இளைஞர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பும் வழியில், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த நிறுத்தினார். காரில் பாட்ஸ்டேக் பொருத்தவில்லை , பர்சில் காசும் இல்லை . டெபிட் கார்டு வழியாக கட்டணம் செலுத்த முடியுமா என கேட்டார். சுங்கச்சாவடி ஊழியர்கள் மதிக்கவில்லை . UPI பண பரிமாற்றம் ஓகே வா என கேட்ட போது அதற்கு மறுத்துவிட்டனர் . பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஜார்ஜ் காரின் பின் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த வாகனங்கள் ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தனர். அதனால் காரை லேசாக நகர்த்தினார் . ஜார்ஜ் தப்பி செல்வதாக நினைத்த ஊழியர்கள், கார் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்தனர் . இதனால் ஜார்ஜ்க்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் முத்தியது.
வாசகர் கருத்து