Advertisement

கேரளாவில் 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல முடிவு

பொது ஜனவரி 05,2021 | 08:50 IST

Share

கேரளாவில் சமீபத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள் மர்மமாக இறந்து கிடந்தன. சோதனையில் ஐந்து வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் 'எச்5என்8' வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பறவை காய்ச்சலை தடுக்க 12 ஆயிரம் வாத்துகள் கொல்லப்பட்டன. தற்போது மேலும் 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. வாத்துகளால் , மனிதர்களுக்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்கால் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் தகவல் சேகரிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சலால் இறப்புகள் நிகழும் பகுதிகளில், மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனமத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. மர்மமான முறையில் பறவைகள் இறக்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X