பொது ஜனவரி 05,2021 | 12:25 IST
தமிழ கடவுள் முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. தமிழ்நாடு மட்டுமின்றி கேரள, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர், இதை பரிசீலித்த தமிழக அரசு, தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்தாக முதல்வர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து