சினிமா வீடியோ ஜனவரி 08,2021 | 07:25 IST
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இது தவிர சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை சோனியா அகர்வாலை சட்டப்படி பிரிந்த பின்னர் மயக்கம் என்ன படத்தில் தன்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனர் கீதாஞ்சலி என்பவரை 2011ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கர் என்ற மகனும் உள்ள நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமானார். இன்று(ஜன., 7) காலை இந்த தம்பதிக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ரிஷிகேஷ் என பெயரிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து