Advertisement

முதல்வர் பழனிசாமி அறிக்கை

பொது ஜனவரி 08,2021 | 20:50 IST

Share

தியேட்டர்களில் 100 சதவீதம் இருக்கைகளில் ரசிகர்கள் அமர்ந்து படம் பார்க்க சமீபத்தில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. கொரோனா பரவல் முடிவுக்கு வராததை சுட்டிக்காட்டி, டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருக்கும் போது 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது சரியல்ல என தமிழக அரசை மத்திய அரசும் கண்டித்தது. உத்தரவை திரும்பப் பெற அறிவுறுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டின் மதுரை கிளை, 50 சதவீத இருக்கைகளில் மட்டும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. டாக்டர்கள், மத்திய அரசு, ஐகோர்ட் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்ததை அடுத்து, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்களின் நலன் கருதி 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டும் ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டும் அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட உத்தரவிடப்படுகிறது. கூடுதல் காட்சிகளை திரையிடவும் தியேட்டர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என, முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X