பொது ஜனவரி 09,2021 | 10:03 IST
அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த ராஜ் அய்யர் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திருச்சி என்.ஐ.டியில் பி.டெக் படித்துள்ளார். பின் பெங்களூருவில் பொறியல் துறையில் ஆராய்ச்சி முடித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கவிற்கு சென்று 25 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அமெரிக்க ராணுவத்தின் தலைமை தகவல் அதிகாரியாக தமிழர் நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. ராஜ் அய்யருக்கு கிடைத்த தலைமை பதவி 3 நட்சத்திர தளபதி பதவி அந்தஸ்துக்கு சமமானதாகும். இவருக்கு கீழ் 15 ஆயிரம் வீரர்கள் உலகெங்கும் உள்ள 100 நாடுகளில் பணியாற்றுகின்றனர். 1600 கோடி டாலர் மதிப்பிலான ராணுவ தளவாட கொள்முதலை மேற்பார்வை செய்ய உள்ளார். ராஜ் அய்யர் மனைவி பிருந்தா தகவல் தொழில்நுட்ப சுகாதார தொழில் நிபுணர். இவரும் அமெரிக்க அரசில் பணி புரிந்து வருகிறார்.
வாசகர் கருத்து