Advertisement

லண்டன் மேயர் மக்களுக்கு எச்சரிக்கை

பொது ஜனவரி 09,2021 | 14:25 IST

Share

லண்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் கைமீறி போய்விட்டதாக நகரத்தின் மேயர் சாதிக் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 7000 ஆயிரத்துக்கும் அதிகமனோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதில் 1000 த்தும் அதிகமோருக்கு ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்ததை விட 35 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது. 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் லண்டனில் , 30 பேரில் ஒருவருக்கு கொரோனா ஒருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மை ஹார்ட் இஸ் பிரோக்கன் என ராயல் லண்டன் மருத்துவமனை டாக்டர் சமந்தா கவலை தெரிவித்துள்ளார். அனுமதிக்கபட்டவர்கள் 20 முதல் 30 வயதுடையவர்களாக இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் 500 பேர் இறந்துள்ளனர் . கடந்த வாரத்தை விட இரண்டு மடங்காக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் லண்டன் மருத்துவமனைகள் தத்தளிக்கிறது. இப்படியே நிலைமை தொடர்ந்தால் மருத்துவமனைகளில் படுக்கை இல்லாத நிலை ஏற்படும் என பயத்தில் இருக்கின்றனர் . அவசியம் இருந்தால் மட்டுமே தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வாங்க என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார் மேயர் சாதிக்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X