அரசியல் ஜனவரி 09,2021 | 19:23 IST
மதுரையில் பாஜ சார்பில் நடந்த பொங்கல் விழாவில் நடிகை குஷ்பூ கலந்து கொண்டு பொங்கல் வைத்தார். அதன்பிறகு அவர் கூறுகையில், பெண்கள் பாதுகாப்பு பற்றியும், ஊழல் பற்றியும் பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றார். 8 ஆண்டுக்கு முன் என் வீடு மீது திமுகவினர் கல்வீசி தாக்கியபோது ஸ்டாலினைச் சந்திக்க ஓடினேன் என பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஸ்டாலின் மக்களை காப்பாற்ற மாட்டார். தலைமை கட்டளையிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றார்.
வாசகர் கருத்து