சினிமா வீடியோ ஜனவரி 15,2021 | 07:25 IST
திரைப்படங்களில் புகை பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் இடம் பெற்றால் அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் பட போஸ்டர்களுக்கு அப்படி கிடையாது. இதனால் பல ஹீரோக்களின் போஸ்டர்கள் புகைப்பிடிப்பது போன்று வெளியாகி, சர்ச்சையாகி பின் அவற்றை நீக்கியும் உள்ளனர். ஆனாலும் அதை அவர்கள் கைவிடுவதாக தெரியவில்லை. இப்போது செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்திற்காக வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் புகை பிடிக்கிறார். இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
வாசகர் கருத்து