விளையாட்டு ஜனவரி 15,2021 | 06:50 IST
நியூசிலாந்தில் பெண்களுக்கான சூப்பர் ஸ்மாஷ் 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. டுனிடினில் நடந்த போட்டியில் வெலிங்டன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஒடாகா அணியை வீழ்த்தியது. அபாரமாக ஆடிய வெலிங்டன் அணியின் சோபி டிவைன், 108 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார். இவர், 36 பந்தில் சதத்தை எட்டினார். இதன்மூலம் பெண்கள் 'டுவென்டி-20' யில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் விண்டீசின் டாட்டின், 2010ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 38 பந்தில் சதம் அடித்து இருந்தார்.
வாசகர் கருத்து