பொது ஜனவரி 15,2021 | 15:50 IST
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுகத்தில் மருத்துவமனை ஒன்று தரைமட்டமானது. இடிபாடுகளில் நோயாளிகள், ஊழியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கவர்னர் அலுவலகம் உட்பட பல்வேறு வீடுகள், பாலங்கள் சேதமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 34 பேர் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தின் மையம் மாஜீன் நகரத்துக்கு 6 கிமீ தொலைவில் இருந்தது. பூமிக்கு கீழ் 10 கிமீ ஆழத்தில் பூகம்பம் ஏற்பட்டதால் சேதம் அதிகம் என நிபுணர்கள் தெரிவித்தனர். சுமார் 7 விநாடிகளுக்கு நிலநடுக்கம் நீடித்துள்ளது. 10 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் உள்ளனர்.
வாசகர் கருத்து