பொது ஜனவரி 15,2021 | 16:50 IST
ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினரால் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. காட்டுயானைகளை விரட்டவும், சுற்றுலா பயணிகள் சவாரி செய்யவும் இந்த யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோழி கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. யானைகள் அலங்கரிக்கப்பட்டு, மலைவாழ் மக்கள், வனத்துறையினர் இணைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர், பின் கரும்பு, வாழை, பொங்கல் முதலியவை யானைகளுக்கு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து