பொது ஜனவரி 15,2021 | 20:50 IST
தேனியில் பொங்கல் விழா கோலாகலம் 5 மாவட்டங்களின் பாசனத்துக்கு ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர், ஜான் பென்னிகுவிக். அவரது 180வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனிமாவட்டம் கூடலூர் லோயர்கேம்பில் உள்ள மணிமண்டபத்தில் பென்னிகுவிக் படத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலரஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, கம்பம் அருகே பாலார்பட்டியில் அரசு சார்பில் நடந்த பொங்கல் விழாவில் ஓபிஎஸ் கலந்து கொண்டார். விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அவர், மாட்டு வண்டியை நின்றபடி உலா வந்தார். கிராமத்தினருக்கு பொங்கல் வாழ்த்து கூறினார். அதன்பிறகு, எம்பி ரவீந்திரநாத் எம்எல்ஏ ஜக்கையன் உள்ளிட்ட ஆதரவாளர்களை ஏற்றிக் கொண்டு மாட்டு வண்டியை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: