பொது ஜனவரி 15,2021 | 22:00 IST
மேற்கு வங்க சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமானால், முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸில் இணைய வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். மம்தாவால் தனியாக பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். எனவே, பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை தடுக்க, காங்கிரஸில் மம்தா இணைய வேண்டும். காங்கிரஸ் உதவி இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்பதை மம்தா இப்போது உணர்ந்திருப்பார். அவருக்கு வேறு வழி இல்லை என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சொன்னார். முன்னதாக, பாஜவை வீழ்த்த தனியாக போராடும் முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் துணைநிற்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் கோரியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தான் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் பேசியிருக்கிறார்.
வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:
மேலும் 2 கருத்துக்கள்...