செய்திச்சுருக்கம் ஜனவரி 16,2021 | 07:52 IST
மத்திய அரசு அறிவிப்பின் படி இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளது. முதல்கட்டமாக முன்கள் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு போடப்படும். இந்த மாபெரும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 166 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
வாசகர் கருத்து