Advertisement

கனமழையால் பயிர்கள் அழிந்து நாசம்

சம்பவம் ஜனவரி 16,2021 | 08:23 IST

Share

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனா நதி உள்ளிட்ட அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால் அணைகளிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, ஆத்தூர், ஏரல் , புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அறுவடைக்கு காத்திருந்த நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமானது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X