பொது ஜனவரி 16,2021 | 08:52 IST
வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள காவலூர் பகுதியில் அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான காங்கேயம் வகையை சேர்ந்தது இந்த காளை. பெயர் செண்பகதோப்பு டான். பெயருக்கு ஏற்றார் போல் போட்டிகளின் டான் தான். கடந்த ஆண்டு 6 கிராம போட்டிகளில் முதல் பரிசு பெற்றது. இந்தண்டு அணைக்கட்டில் நடைபெற்ற எருதுவிடும் விழாவிற்கு இந்த காளை அழைத்துவரப்பட்டது. அப்போது பந்தயத்திற்கு முன்பாக சாலையில் சென்று கொண்டிருந்த காளை மீது மினிலாரி மோதியது. இதில் காளையின் இடது பகுதியில் உள்ள இரண்டு விலா எலும்பு முறிந்து, வயிற்றுப் பகுதி கிழந்து குடல் மற்றும் இரைப்பை வெளியே சரிந்தது. அதிகமான இரத்து போக்கு ஏற்பட்டது. வேலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் காளை அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் ரவி ஷங்கர், அரோஷ், ஜோசப் ராஜ் , இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டணர். எழு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. விலா எலும்பு பகுதியில் பிளேட் வைத்து இணைக்கப்பட்டது. 5 நாள் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சை வேலூர் அரசு கால்நடை மருத்துவர்கள் செய்து சாதித்துள்ளனர். உடல்நலம் தேரிய பின் பந்தையில் காளை பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து