Advertisement

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரசியல் ஜனவரி 16,2021 | 11:29 IST

Share

லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. சட்டசபைத் தேர்தலிலும் அதே சின்னமே கிடைக்கும் என கமல்ஹாசன் நினைத்திருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் மட்டும் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனிடையே, டார்ச் லைட் சின்னம் தங்களுக்கு வேண்டாம் என எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன் கூறினார். வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு கடிதமும் அனுப்பினார். உடனே டார்ச் லைட் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை மனு அளித்தது. கோரிக்கையை ஏற்ற தேர்ணதல் ஆணையம் தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Swaminathan Chandramouli
Swaminathan Chandramouli , இந்தியா. 16-ஜன-2021 | 12:19:42 IST Report Abuse

கமலுக்கு டார்ச் லைட் சின்னம் கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சி . டார்ச் லைட் என்றால் பேட்டரியில் இயங்கி ஒளியை பாய்ச்சும் சாதனம் , இதில் ஒரு சிக்கல் உள்ளது பேட்டரி செயல் இழந்து விட்டால் வெளிச்சம் நின்று விடும் அப்புறம் இருட்டு தான் அதற்காகவே முன் கூட்டியே ஏராளமாக பேட்டரிகளை வாங்கி வைத்து கொள்ளவேண்டும் கொள்முதலில் திருட்டுத்தனம் கூடாது முப்பது ருபாய் பேட்டரியை நாற்பது ருபாய் என்று பொய் கணக்கு எழுதக்கூடாது மய்யம் விழிப்புடன் இருக்கவேண்டும்

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X