பொது ஜனவரி 16,2021 | 14:20 IST
உலக புகழ் பெற்ற, மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முனியாண்டி கோயில் காளைக்கு இருவரும் மரியாதை செய்து அவிழ்த்து விட்டனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்த பின் போட்டியில் இறங்கினர். அலங்காநல்லூரில், 655 காளைகள் பங்கேற்கின்றன. 700 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர். காளைகளை அடக்கிய காளையர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கினார். தங்ககாசு, சைக்கிள், பீரோ, கட்டில், பிரிட்ஜ் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக முதல் இடத்தை பிடிக்கும் வீரருக்கு முதல்வர் பழனிசாமி வழங்கும் கார் பரிசாக கிடைக்கும்.
வாசகர் கருத்து